இலங்கையில் வரலாறு காணாத பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தமைக்கான மூன்று காரணங்களை குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெளிவூட்டினார்.
இது தொடர்பில அவர் மேலும் தெரிவிக்கையில்,
”நாட்டின் வரி 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் பாரியளவில் குறைக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் வருமானம் 8.5 வீதமாக குறைவடைந்தது. அந்த சந்தர்ப்பத்தில் சர்வதேச நாணய நிதியம் உடன்படிக்கைகளிலிருந்து அப்பாற் சென்று, நிவாரண உதவிகளை வழங்க முடியாது என அறிவித்தது” என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஆண்டொன்றிற்கு 600 முதல் 700 பில்லியன் ரூபா வரை நாட்டிற்கு இல்லாது போனதாகவும் அவர் கூறியுள்ளார்.இலங்கை கொவிட் வைரஸ் தொற்றை எதிர்நோக்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான காரணங்களே, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதற்கான பிரதான காரணங்களாக அமைந்ததாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.