மீண்டும் களத்தில் குதிக்கும் ரிஷி சுண்ணக்: இவர்களில் யார் அடுத்த பிரதமர் ? பென்னி !

Secretary of State for Defence
The Rt Hon Penny Mordaunt MP

பிரித்தானியாவின் பிரதமராக வெறும் 44 நாட்கள் மட்டுமே பதவி வகித்த, லிஸ் ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து. 7 தினங்களுக்கு உள்ளே(அதாவது வரும் வெள்ளிக்கிழமை) 28.10.2022 அன்று, புது பிரதமரை ஆழும் கட்சி தெரிவு செய்ய வேண்டும். இன் நிலையில், முன்னர் போட்டியிட்ட ரிஷி சுண்ணக் மீண்டும் களம் இறங்க உள்ளார். இதேவேளை அவரோடு போட்டியிட களம் இறங்கியுள்ளார் பென்னி மோடன்ட் என்னும் பெண்மணி. இதனால் ஆழும் கான்சர்வேட்டிவ் கட்சியில், மீண்டும் ஒரு தேர்தல் நடந்து, கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளார்கள். இதனை தொடர்ந்து 28ம் திகதி, புது பிரதமர் அறிவிக்கப்பட உள்ளார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

இம் முறை ரிஷி சுண்ணக்கிற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏன் எனில் பென்னி மோடன்ட் அம்மையாரை விட ரிஷி சுண்ணக் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். மேலும் சொல்லப் போனால், நிதி நெருக்கடியை சமாளிக்கவும் வல்லவர். கடந்த முறை நடந்த உள்ளக தேர்தலில், ரிஷி சுண்ணக் தோற்றுப் போக காரணம், பொறிஸ் ஜோன்சனின் ஆதரவாளர்கள் தான். ஏன் எனில் சாதாரண MP யாக இருந்த ரிஷி சுண்ணக்கை, கட்சியில் பெரிய பதவிக்கு வளர்த்து விட்டவர், பொறிஸ் ஜோன்சன். ஆனால் கடைசியாக, பொறிஸ் ஜோன்சனின் காலை வாரி விட்டார் ரிஷி. திறைசேரி அமைச்சராக இருந்த ரிஷி, ராஜினாமா செய்ததை அடுத்தே, பொறிஸ் ஜோன்சன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டி வந்தது. இதனால்…

கடும் ஆத்திரம் அடைந்த பொறிஸ் ஜோன்சனின் ஆதரவாளர்கள், ரிஷி சுண்ணக்கிற்கு எதிராக வாக்கு போட்டு அவரை தோற்கடித்து,  லிஸ் ரஸ்சை பிரதமர் ஆக்கினார்கள். ஆனால் அதற்கான பலா பலனை தற்போது அவர்கள் அனுபவித்து வருகிறார்கள். ஏற்கனவே திறைசேரி அமைச்சராக இருந்த ரிஷி சுண்ணக், நிதி நெருக்கடியை கையாளத் தெரிந்தவர். எனவே இம்முறை அவரை பிரதமர் ஆக்கினால், கொஞ்சமாவது பலன் இருக்கும். இல்லையென்றால் முழு அளவில் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டி இருக்கும். இதுவே இன்றைய பிரித்தானியாவின் நிலை ஆகும்.

Related Posts