முதல்ல இருந்து ஆரம்பிக்கலாமா…? வெறித்தனமா WORKOUT செய்து வீடியோ வெளியிட்ட ஜோதிகா!

நடிகை ஜோதிகா வெளியிட்ட ஒர்க் அவுட் வீடியோவுக்கு அள்ளும் லைக்ஸ்!

ஒரு காலத்தில் தொட்டதெல்லாம் ஹிட் கொடுத்தவர் நடிகை ஜோதிகா. மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தென்னிந்திய சினிமா பக்கம் கவனம் செலுத்தி தொடர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

அதன் பிறகு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு தேவ், தியா என்ற ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். குடும்பம் குழந்தை என பிசியாக இருந்து வரும் ஜோதிகா சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.

பின்னர் மீண்டும் நாச்சியார், ராட்சசி, சந்திரமுகி, உடன்பிறப்பே உள்ளிட்ட சில படங்களில் நடித்து மீண்டும் தனக்கான இடத்தை பிடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை பிரம்மிப்படைய வைத்துள்ளார்.

இதோ அந்த வீடியோ லிங்க்:

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jyotika (@jyotika)

 

Related Posts