லண்டன் தமிழர்களே மாதம் தோறும் £66 பவுண்டுகள் கிடைக்கிறதா ? கிடைக்கவில்லை என்றால் என்ன செய்யவேண்டும் ?

பிரித்தானிய அரசின் திட்டத்தின் அடிப்படையில், மாதம் தோறும் உங்கள் Energy supply நிறுவனம் £66 பவுண்டுகளை உங்களுக்கு தரவேண்டும். நீங்கள் மாதம் தோறும் கட்டணத்தை Direct-debit மூலம் கட்டி வந்தால். உங்கள் வங்கிக்கு இந்த £66 பவுண்டுகள் வந்து சேரும். அக்டோபர் மாதம் முதல் இந்த கொடுப்பனவு அனைத்து வீடுகளுக்கும் வர வேண்டும். வரவில்லை என்றால் உடனே உங்கள் Energy supply நிறுவனத்திற்கு அழைப்பை விடுத்து பேசுங்கள். சில வேளை நீங்கள் பணத்தை Direct-debit முறையில் கட்டவில்லை, காசாக செலுத்தி வரும் நபர் என்றால். உடனே தொடர்பு கொண்டு பேசி, இந்தப் பணத்தை எப்படிப் பெற்றுக் கொள்வது என்று அறிந்து கொள்ளவும்.

தற்போதைய நிலவரப்படி 2023 மார்ச் மாதம் வரை ஒவ்வொரு மாதமும்,  கம்பெனி உங்களுக்கு £66 தொடக்கம் £67 பவுண்டுகளை பணமாக கொடுக்க வேண்டும். இது அரசாங்கத்தின் கட்டளை. எந்த நிறுவனமும் மீற முடியாது.

Related Posts