வர்த்தகரிடம் கப்பம் கோரிய பெண் கைது!!!

பேருவளை பிரதேசத்தில் உள்ள இரத்திணக்கல் வர்த்தகர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைவாக குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடை இரண்டு பிள்ளைகளின் தாயாகும்.

குறித்த வர்த்தகர் வியாபாரம் தொடர்பாக இந்தியா சென்றபோது குறித்த பெண்னுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும் பின்னர் இருவரும் ஹோட்டல் ஒன்றில் ஒன்றாக இருந்ததை படமெடுத்து அதனை தனது வீட்டாரிடம் காட்டப்போவதாக கூறி கப்பம் கோரியுள்ளார்.

இதனையடுத்து குறித்த வர்த்தகர் அப்பெண்னின் வங்கிக் கணக்கிற்கு பத்து இலட்சம் ரூபாயினை ஏற்கனவே வைப்பிலிட்டுள்ளார். இதனையடுத்து மிகுதி பணத்தினை கேட்டு அச்சுறுத்திய போது பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த பெண்னை பணத்தினை பெறுவதற்காக வரவழைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Posts