90 நிமிடமாக இருவரும் கூச்சல் போட்டு சண்டை பிடித்தார்கள்: கடைசியில் தான் ராஜினாமா !

இலக்கம் 10 பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தில், உள்துறை அமைச்சர் சுலைலா மற்றும் பிரதமர் லிஸ் ஆகியோர் பெரும் கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த கூச்சல் குழப்பம் சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது என்று, பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் மீடியாக்களுக்கு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்தே உள்துறை அமைச்சர், முதுகில் குத்தும் வகையில், உடனே ராஜினாமா செய்தார் என்று கூறப்படுகிறது. உள்துறை அமைச்சுக்கு கொடுக்கப்பட வேண்டிய சில சலுகைகளை லிஸ் ரஸ் ரத்துச் செய்ததோடு , சுலைலா போட்ட சில திட்டங்களையும் நிராகரித்துள்ளார். இதனால் தனது அமைச்சு, பொறுப்புகளில் பிரதமர் தலையிடுவதாக சுலைலா, கூச்சலிடவே… தொடர்ந்து..

லிஸ் ரஸ்சும் பதிலுக்கு, சுலைலாவை திட்டி,  கூச்சலிட்டுள்ளார். ஒட்டு மொத்தத்தில் இதனை பார்க்க ஒரு சந்தை போல இருந்தது என்று குறித்த அதிகாரி விவரித்துள்ளதோடு. இந்த நிலை நீடித்தால், அடுத்து வரும் தேர்தலில் ஆழும் கட்சி 200 ஆசனங்களை இழக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். இதேவேளை புதிய பிரதமர் லிஸ் ரஸ்டை எப்படி பதவியில் இருந்து விலக்குவது ? என்பது தொடர்பாக, ஆழும் கட்சியின் சில மூத்த தலைவர்கள் ஆராய ஆரம்பித்து விட்டார்கள் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பார்த்தால் இன்னும் சில மாதங்களில் , அடுத்த புது பிரதமர் ஆட்சிக்கு வரக் கூடும்.

Related Posts