ஆட்சிக்கு வந்து வெறும் 44 நாட்களே ஆன நிலையில், லிஸ் ரஸ் தனது பதவியை தாம் ராஜினாமா செய்வதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் லிஸ் ரஸ் பதவியில் இருந்து விலகுவதாக சற்று முன்னர், அறிவித்ததை தொடர்ந்து, பெரும் குழப்ப நிலை தோன்றியுள்ளது. ஆழும் கட்சி ஒரு தலைவரை தெரிவு செய்யும் வரை தான் பிரதமராக இருப்பேன் என்று கூறி விட்டு, வேறு எதுவும் பேசாமல் சடுதியாக அவர் தனது அலுவலகத்திற்கு சென்று விட்டார்.
இதனால் பிரித்தானியாவில் மேலும் பெரும் குழப்ப நிலை தோன்றியுள்ளது. பிரித்தானிய பவுண்டு மேலும் வீழ்ச்சி கண்டு, பண வீக்கம் அதிகரிக்க உள்ளது என்ற கவலையான செய்தியும் வெளியாகியுள்ளது. பிரித்தானிய அரசே ஸ்திரம் அற்ற நிலையில் இருப்பதானால், பங்கு சந்தை தொடக்கம் பண வீக்கம் மற்றும் நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி என்று பல சங்கிலி தொடர் வீழ்ச்சிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.