
இலங்கையில் கோதுமை மாவின் விலையானது என்றுமில்லாதவாறு அதிகரித்ததன் காரணமாக அதனை அடிப்படையாகக் கொன்ட அனைத்து உணவுப் பொருட்களின் விலைகள் மிக மோசமாக அதிகரித்துள்ளது. இதற்கிணங்க, கோதுமை மாவின் விலையானது மேலும் 25 ரூபாவாக குறைவடைந்தள்ளதாக உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் 110 ரூபாவால் குறைக்கப்பட்டு 290 ரூபாவுக்கு விற்கப்பட்ட கோதுமை மாவானது தற்பொழுது 265 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது, மாறாக இவ் விலைக் குறைப்பினால் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைக்கப்பட மாட்டாது என பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.