சிறுவனை கிணற்றில் தலைகீழாக தொங்கவிட்ட கொடூரன்-!

மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் போனை திருடியதாக கூறி , 9 வயது சிறுவனை நபர் ஒருவர் கொடுமைப்படுத்தியுள்ளார்.

9 வயது சிறுவனை அஜித் ராஜ்புத் என்ற நபர் கிணற்றில் தலைக்கீழாக கட்டி தொங்கவிட்டு வீடியோ எடுத்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த சிறுவன் பொலிஸாரால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Related Posts