பொறிசுக்கு 140 MPக்கள் ஆதரவா ? ஆனால் வெல்லப் போவது ரிஷி சுண்ணக் என்பது நிச்சயம் !

முன் நாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சன், தனது விடுமுறையை ரத்துச் செய்து விட்டு அவசரமாக பிரித்தானியாவுக்கு திரும்பியுள்ளார். ஆசை யாரைத் தான் விட்டது? அதிலும் பதவி ஆசை ? தனக்கு 140 MPக்கள் ஆதாரவாக உள்ளார்கள் என்று கூறி, மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டி இடும், பட்டியலில் இடம் பிடித்துள்ளார் பொறிஸ். தற்போது 3 போட்டியாளர்கள் தான் உள்ளார்கள், அது வேறு யாரும் அல்ல. ரிஷி சுண்ணக், பொறிஸ் ஜோன்சன், மற்றும் பென்னி. இவர்கள் மூவரில் ரிஷி சுண்ணக்கிற்கு தற்போது கட்சிக்கு உள்ளே பெரும் ஆதரவு பெருகி வருகிறது. இதனால் அவர் 35 புள்ளிகளை எடுத்து முன் நிலை வகிக்கிறார் என அதிர்வு இணையம் அறிகிறது. எனவே…

பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக ரிஷி சுண்ணகே வரப்போகிறார் என்பது தெளிவாகிறது. இது ஒரு வரலாறும் கூட. ஒரு இந்திய வம்சாவழி நபர், பிரித்தானியாவின் பிரதமர் ஆவது இதுவே முதல் தடவை என்பது போக. ஆங்கிலேயர் அல்லான பிறிதொரு நபர், பிரித்தானியாவின் பிரதமர் ஆகுவதும் இதுவே முதல் தடவை ஆகும். தற்போது ரிஷி சுண்ணக்கிற்கு பெரும் சவாலாக இருப்பது, பொறிஸ் ஜோன்சன் தான். இருப்பினும் ராஜினாமா செய்த ஒரு பிரதமர் மீண்டும் ஆட்சிக்கு வருவது என்பது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை.

இதனை டோரிக் கட்சி தலைவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது தெரியவில்லை. எனவே இன்னும் சில தினங்களில் முடிவு வெளியாகி விடும். பெரும் போட்டிகள் நடந்தாலும், யார் பிரதமர் ஆனாலும், அவர்களுக்கு காத்திருக்கும் சவால் மிகப் பெரியது. 35 B பில்லியன் பவுண்டுகள் கடனில் உள்ளது பிரித்தானிய அரசு. இதனை எப்படி சமாளிப்பது என்பது தான் பெரிய விடையம்.

Related Posts