ரஷ்ய போர் விமானம் பிரித்தானிய ஸ்பை விமானம் மீது ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தியது !

சர்சைக்குரிய கருங்கடல் பகுதியில், பிரித்தானியாவின் அதி நவீன வேவு பார்க்கும் விமானம் பறப்பில் இருந்தது. அது ஒரு சர்வதேச கடல் பரப்பு ஆகும். அங்கே திடீரென வந்த 2 ரஷ்ய போர் விமானங்கள். பிரித்தானிய விமானத்தை நோக்கி ஏவுகணையை ஏவி தாக்கியுள்ளது. ரஷ்யாவின் ஸூ௨7 போர் விமானங்கள், பிரித்தானியாவின் வேவு விமானத்தை நோக்கி ஏவுகணையை ஏவிய போது. பிரித்தானிய விமானம், எதிர் வினை வெப்ப துண்டுகளை வீசியது. இதனால் ஏவுகணை, பாதை மாறி அந்த சிறிய துண்டுகளை பின் தொடர்ந்து சென்று வேறு இடத்தில், வெடித்து விட்டது. இதனால் பிரித்தானிய விமானம் தப்பி விட்டது. இவ்வாறு பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Posts