அமெரிக்காவில் கலைக்கட்டும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள்-!

இந்துக்களின் தீபாவளி பண்டிகை தமிழர்கள் வாழ் உலக நாடுகளில் எதிர்வரும் 24-ம் திகதி கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில் அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டது. நாட்டின் பல மாகாணங்களின் தலைநகர், கவர்னர் மாளிகைகளில் தீபாவளி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைநகர் வாஷிங்டனில் அரசு சார்பில் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்திய-அமெரிக்க பிரபலங்கள் தலைநகரில் குவிந்து வருகின்றனர்.

வெள்ளை மாளிகையில் கொண்டாட்டம் இந்த நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரீஸ், தனது வீட்டில் நேற்று பண்டிகையை கொண்டாடினார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று தீபாவளி கொண்டாடினார். இதில் பங்கேற்பதற்காக சுமார் 200 இந்திய-அமெரிக்கர்களுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். இதில் இந்திய நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும், பங்கேற்றவர்களுக்கு இந்திய உணவுகளும் பரிமாறப்பட்டன.

வெள்ளை மாளிகையில் எதிர்வரும் 24-ம் திகதி ஜனாதிபதி ஜோபைடன், தனது மனைவி ஜில் பைடனுடன் தீபாவளி கொண்டாடவுள்ளார்.

 

Related Posts