அரசியலமைப்பின் திருத்தச்சட்டத்திற்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு!!!

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்கொன்டுள்ள நிலையில் அதற்கு தீர்காணும் முதற்கட்ட செயற்பாடாக அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டம் காணப்படுகின்றது. எனவே, அதில் காணப்படும் குறைகளை சுட்டிக்காட்டி அதற்கு முழுமையான ஆதரவினை வழங்க தீர்மாணித்துள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ் திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படவில்லை. அமச்சரவை நியமனம், அமைச்சின் செயலாளர் நியமனம் போன்ற முக்கிய பல விடயங்கள் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ளது. எனவே நாட்டு மக்களின் நலநனை கருத்தில் கொன்டு அரசியல் கட்சிகளுக்கு அப்பால் பட்டவகையில் ஜனாதிபதி செயற்படுவது அவசியமாகும். எனவே தற்போதய பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்வுபெற்றுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கும் முரன்பாடற்ற வகையில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

Related Posts