
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 2000 அரச காணிகள் சட்டரீதியற்ற முறையில் சூறையாடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்தியானது சிங்கள மொழி பத்திரிக்கையில் வெளியாகியுள்ளதை சுட்டிக் காட்டி இது தொடர்பாக பாராளுமன்றத்தில கருத்து தெரிவித்த அவவர், இவ்விடயம்கள் தமிழ் ஊடகங்களில் வெளிவராமைக்கான காரணம் அங்குள்ள ஊடகவியளாளர்களுக்கு தலா 10 பேர் காணி வழங்கப்பட்டு அவர்களது வாய் அடைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இது தொடர்பாக தான் ஆராய்ந்தபோது, அங்குள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவில் பதவி வகிக்கும் பதில் பணிப்பாளர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் தலா 10 பேரச் காணியினை வழங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஏதும் பிரச்சினை வந்தால் அரசகாணியினை தனியார் காணியாக மாற்றுவதற்கு பலகோடி ரூபாயினை மோசடி செய்துள்ளனர். அந்த வகையில் சுமார் 2000 ஏக்கர் அரச காணி மோசடியான முறையில் விற்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் கூறுகையில், இம் மாவட்டத்தில் உள்ள தொழில் முயற்ச்சியாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு சிறிய காணியினைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல் உள்ள நிலையில் இவ்வாறான மோசடியானது இடம்பெற்றுள்ளது என்றார்.