பழி வாங்க என காலம் காத்தாலே 2.30 மணிக்கு Dominican Republicஇல் இருந்து லண்டன் Gatwick புறப்பட்ட பொறிஸ்

லிஸ் ரஸ் பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தவேளை, முன் நாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சன், டொமினிக்கன்  ரி-பப்ளிக் என்ற நாட்டிற்க்கு, தனது மனைவியோடு சுற்றுலா சென்றிருந்தார். இன்று அதிகாலை 2.30AM அளவில், அன் நாட்டில் இருந்து அவசரமாக விமானத்தைப் பிடித்து, லண்டன் கட்-விக் விமான நிலையம் நோக்கி புறப்பட்டுள்ளார் பொறிஸ். 100 MPக்களின் ஆதரவு இருந்தால், மட்டுமே, பிரதமர் பதவி கிட்டும் என்ற நிலை கட்சியில் உள்ளது. ஏற்கனவே தனக்கு 100 MPகள் ஆதரவாக உள்ளதாக, ரிஷி சுண்ணக் தெரிவித்து, அதற்கான ஆவணத்தை கட்சியிடம் கொடுத்து விட்டார். ஆனால் பொறிஸ் ஜோன்சனுக்கு 51 MPக்கள் மட்டுமே ஆதரவாக உள்ளார்கள். அது போக 3வது போட்டியாளராக உள்ள பென்னிக்கு வெறும் 22 MPக்கள் ஆதரவு கொடுத்துள்ளார்கள். இன் நிலையில் அடுத்து என்ன நடக்கும் ?

பொறிஸ் ஜோன்சன் தனக்கும் 100 MPக்கள் ஆதரவாக உள்ளார்கள் என்று நிரூபித்தால், இரண்டு பேருக்கு இடையே போட்டி நடக்கும். இம்முறை MPக்களின் வாக்கு மற்றும் கட்சியின், முக்கிய உறுப்பினர்களின் வாக்குகளும் கணக்கில் எடுக்கப்படும். இதனை ஆன் லைனில்(Online Vote) செய்ய டோரி கட்சி ஏற்பாடு செய்துள்ள நிலையில். ரஷ்யாவின் தலையீடு,  இதில் அதிகமாக இருக்கும் என்று , பாதுகாப்பு அமைச்சு (MOD) எச்சரிக்கை விடுத்துள்ளது. காரணம் ரஷ்ய ஹக்கர்கள், டோரி கட்சியின் சேவரை ஊடறுத்து, முடிவுகளை மாற்ற முடியும். அந்த அளவு ரஷ்ய ஹக்கர்கள் மிகவும் திறமையானவர்கள். எனவே பழைய காலம் போல, பேப்பரில் பெயர்கள் அச்சடிக்கப்பட்டு , அதில் புள்ளடி போட்டு பெட்டியில் போடுவதே நல்லது என்கிறார்கள்.

இது இவ்வாறு இருக்க, வரும் திங்கட் கிழமைக்கு முன்னதாக 100 MPக்களின் ஆதரவை பொறிஸ் ஜோன்சனால் காட்ட முடியவில்லை என்றால், வெற்றி பெற்றவராக ரிஷி சுண்ணக்கை அறிவிப்பார்கள். அதன் பின்னர் ரிஷி பொறிஸ் ஜோன்சனை வைச்சுச் செய்வார் என்று கூறப்படுகிறது. காரணம் கடந்த தேர்தலிலும், பொறிஸ் ஜோன்சன் ஆதரவாளர்களே ரிஷி சுண்ணக்கை தோற்கடித்தார்கள். அது போல தற்போது நடக்கவுள்ள தேர்தலிலும், மீண்டும் பொறிஸ் போட்டியிட காரணம்,  ரிஷி தான். ரிஷியை பழி வாங்கவே பொறிஸ் களம் இறங்கியுள்ளார். வளர்த்த கடா மார்பில் பாய்கிறது என்பார்களே… அது போல வெறும் MP யாக , யாருக்கும் தெரியாமல் இருந்த ரிஷி சுண்ணக்கை, கட்சியில் மூத்த தலைவராக வளர்த்து விட்டவர் பொறிஸ். ஆனால்….

கடைசியில் ரிஷி வைத்த பெரும் ஆப்பில் , சிக்கிய பொறிஸ் தனது பதவியை ராஜினாம செய்ய வேண்டி வந்தது. அந்த துரோகத்தை பொறிஸ் ஜோன்சனால் இன்னும் மறக்க முடியவில்லை. நாடு எக்கேடு என்றாலும் கெட்டுப் போகட்டும். எனது பழி தீர்க்கும் நடவடிக்கையை நான் செய்தே தீருவேன் என்று இந்த அரசியல் வாதிகள் அலைந்து திரிகிறார்கள்.  டோரி கட்சியில் உள்ள அரசியல்வாதிகள் நாட்டு நிலை குறித்து கவலையடைவதாக தெரியவில்லை. உட் கட்சி பூசலை சமாளிக்கவே அவர்களுக்கு நேரம் போதாது போல இருக்கே ?

Related Posts