யாழ்பாணத்தில் மீண்டும் ஒரு சம்பவம்!!!

உரும்பிராய் பிதேசத்தில் உள்ள ஒரு தாய் தனது 17 வயதுடைய மகன் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளதால் அவரை திருத்தி தருமாறு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இன்று ஒப்படைத்துள்ளார்.

குறித்த இளைஞன் க.பொ.த.சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய பின் வீட்டில் இருப்பதாகவும், போதைப்பொருள் பாவனை காரணமாக நேரத்துக்கு ஒழுங்காக சாப்பிடுவதில்லை, தூக்கமின்மை போன்ற பல இடர்களுக்கு முகம்கொடுத்து வரும் நிலையில் தனது மகனின் எதிர்கால நிலமை கருதி அவரை திருத்தி தருமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார். இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட இளைஞனை நாளைய தினம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Related Posts