இலங்கையில் முக்கிய நகரங்களில் பரவும் HIV வைரஸ் : இளைஞர்கள்- யுவதிகள் பாதிப்பு-!!

இளைஞர்களுக்கு மத்தியில் HIV வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராட்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை 15 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட 53 HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.2021ம் ஆண்டு 15 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட 25 HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், அந்த தொகை இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை 53ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இணையவழியான கற்கை நெறிக்கு சென்ற இளைஞர்கள், யுவதிகள், அதனூடாக தேவையற்ற பாலியல் காணொளிகளை பார்த்து, பாலியல் தொடர்புகளை பேணியுள்ளமையே, இந்த அதிகரிப்புக்கான காரணமாக இருக்கலாம் என அவர் கூறுகின்றார்.

இளைய சமூகம் என கூறும் போது, அதில் இளைஞர்களே அதிகளவில் இருக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.2022ம் ஆண்டின் இதுவரையான காலம் வரை HIV வைரஸ் தொற்றுக்குள்ளான 30 இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் யுவதிகள் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே இந்த வைரஸ் தொற்று அதிகளவில் காணப்படுவதாகவும் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராட்ச்சி தெரிவித்துள்ளார்.

Related Posts