தீபாவளியை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை!!!

தீபாவளியினை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 08 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான கடிதம் ஜனாதிபதியிடம் இருந்து சிறைசாலை ஆணையாளருக்கு சென்ற நிலையில், அதில் 04 பேர் விடுவிக்கப்பட்டு தத்தமது வீடுகளுக்கு சென்றுள்ள நிலையில் ஏனைய 04 பேரையும் விடுதலை செய்ய சற்று காலதாமதம் ஏற்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், இவர்கள் 08 பேரும் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அதில் 04 பேர் விடுதலை பெற்றுள்ளனர், அதில் 02 பேர் தமது தண்டனைக்கு எதீராக மேன்முறையீடு செய்துள்ளதால் அதனை மீளப் பெற்றதும் விடுதலை செய்யப்படுவார்கள், ஏனைய இரண்டு பேரும் தமது தண்டனைக்கு மேலதிகமாக 06 மாத புணர்வாழ்வுக்கு உட்படுத்த நீதிமன்றம் கட்டளையீட்டு இருந்தது எனவே ஜனாதிபதி மற்றுமொரு கடிதத்தின் ஊடாக அவர்களை புணர்வாழ்வு இல்லாமல் வெகு விரைவில் விடுவிக்க முடியம் என குறிப்பிட்டார்.

Related Posts