
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவர் ஒருவர் பல்கலைக்கழக விடுதியில் உறங்கிக் கொன்டு இருந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்த 25 வயதுடைய ஹர்ஷ தனஞ்சய என்பவரின் சடலம் தற்போது அவருடைய வீட்டுக்கு கொன்டு செல்லப்பட்டுள்ளது.
மாணவனின் உடலில் வெளிப்புற காயங்களோ அல்லது விசக் கடிகளோ இல்லை எனவும் மரணத்திற்கான காரணத்தினை சட்ட வைத்திய அதிகாரி இன்னும் அறிவிக்க வில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவனின் தந்தை குறிப்பிடுகையில், எனது மகனின் உடலில் எவ்விதமான நோய்களும் இல்லை, விடுதியில் வைத்து இவ்வாறு உயிரிழந்தமை தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் இது தொடர்பில் சரியான விசாரணை முன்னெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்