யாழ் பெண்களிடம் தொலைபேசி பறிமுதல்!!!

யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இளம் பெண்களின் தொலைபேசி திருடப்பட்டுள்ளதாக உரியவர்களால் முறைப்பாடுகள் பதிப்பட்டன. குறித்த முறைப்பாட்டிற்கமைய விசாரணையினை முன்னேடுத்த பொலிசார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இச் செயற்பாடானது ஒரு கொள்ளைக் கும்பலினால் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அதில் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகத்தினைச் சேர்ந்த குறித்த நபரிடம் இருந்து ஒன்பது தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. எனவே தொலைபேசி தொடர்பாக முறைபாடுகளை பதிவுசெய்தோர் பொலிஸ் நிலையத்திற்கு வந்து தொலைபேசியினை அடையாளம் காட்டுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts