ரஷ்யா ஆக்கிரமித்த பகுதியில் இருந்து உக்ரைன் மக்களை உடனடியாக வெளியேற ரஷ்யா அதிகாரிகள் உத்தரவு -!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. தற்போது வரை நீடித்து வரும் இந்த போரில், இரு தரப்பில் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஷ்யா ஆக்கிரமித்த கெர்சன் நகரில் இருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேற ரஷ்யா அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கெர்சன் நகரின் மீது உக்ரைன் ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.கெர்சன் நகர மக்கள் நெய்பர் ஆற்றின் வழியாக படகுகள் மூலம் ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ எல்லைக்குள் வந்து சேர வேண்டும் என ரஷ்யா அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் கெர்சன் நகர மக்கள் ரஷ்யா அதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்கக் கூடாது என்றும், ரஷ்யா அவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்றும் உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Posts