
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்ச்சியில் ஈடுபடும் தரப்பினர்களுக்கு அரசாங்கத்தினால் மிக குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டமானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறையான விவசாயம், சுற்றுலா, ஏற்றுமதி மற்றும் உற்பத்தி துறைகளில் ஈடுபடும் முயற்ச்சியாளர்களுக்கு இத் திட்டத்தின் கீழ் 100 மில்லியன் வரை கடனுதவிகளை பெற்றுக்கொள்ள முடியும்.
குறித்த கடன்திட்டதினை வழங்குவதற்காக, இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, ஹட்டன் நசனல் வங்கி, கொமர்சியல் வங்கி, செலான் வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி, நேசன் ரஷ்ட் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகிய எட்டு நிதி நிறுவனங்களுக்கு 4900 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.