உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக உக்ரைனில் பாதுகாப்பு நிலமை மோசமடைந்து வருவதால் உக்ரைனில் உள்ள மாணவர்கள் மற்றும் இந்திய குடிமக்கள் விரைவில் உக்ரைனை விட்டு உடனே வெளியேற வேண்டும் என்று மோடி கோரியுள்ளார். இதனை அடுத்து பல இந்தியர்கள் உக்கிரைனை விட்டு வெளியேறி வருகிறார்கள். இவ்வாறு நரேந்திர மோடி அறிவிக்க என்ன காரணம் என்பது தெரியாமல் உள்ளதோடு, மேலும் அச்சத்தை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற உக்ரைன் எல்லையை கடக்க ஐந்து வழித்தடங்களை இந்திய தூதரகம் பகிர்ந்து இருக்கிறது. மேலும் இந்திய குடிமக்கள் உக்ரைன் எல்லையை கடக்க பின்வரும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் உக்ரைன் – ஹங்கேரி எல்லை, உக்ரைன் – ஸ்லோவேனியா எல்லை, உக்ரைன்- மால்டோவா எல்லை, உக்ரைன் – போலந்து எல்லை, மற்றும் உக்ரைன் – ருமேனியா எல்லை போன்ற வழிகளை இந்தியர்கள் பாவிக்கலாம் என்று கூறப்படுகிறது.