குட் பாய் சொன்ன பொறிஸ் ஜோன்சன் இன்று ரிஷி சுண்ணக் போட்டி இன்றி பிரதமர் ஆகிறார் !

சற்று முன்னர் தான் பிரதமர் பதவிக்கு போட்டியிட வில்லை என்று, கூறி ஜெகா வாங்கிக் கொண்டார் பொறிஸ் ஜோன்சன். ஆழும் டோரிக் கட்சியின், மூத்த உறுப்பினர்கள் அவரைப் போட்டியிட வேண்டாம் என்று கூறி விட்டார்கள். அத்தோடு கட்சி இருக்கும் நிலையில், பொறிஸ் ஜோன்சன் குழு, மற்றும் ரிஷி சுண்ணக் குழு என்று 2 குழுவாக கட்சி பிரிந்து செயல்படும் நிலை ஏற்படும் என்றும், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பொறிசுக்கு எடுத்துரைத்துள்ளார்கள். இதனை அடுத்தே பொறிஸ் ஜோன்சன் விலகி விட்டார். அத்தோடு அவருக்கு 100 MPக்களின் ஆதரவு கிட்டவில்லை. வெறும் 59 MPக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து இருந்தார்கள். இன் நிலையில் இன்றைய தினம்…

போட்டி எதுவும் இல்லாமல் ரிஷி சுண்ணக் பிரதமர் ஆகிவிடுவார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பென்னிக்கு 22 MPக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ள நிலையில். ரிஷி சுண்ணக்கிற்க்கு 154 MPக்கள் தமது ஆதரவை தெரிவித்துள்ளார்கள். இதனால் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக, ரிஷி சுண்ணக் இன்று தெரிவாகி விடுவார்.

 

Related Posts