நீர்கொழும்பில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி!!!

நீர்கொழும்பு ஆண்டியம்பலம் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நேற்று (23) பிற்பகல் 2.30 அளவில் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு. தப்பிச் சென்று கொண்டிருந்த போது அவர்களை பொலிஸார் பின்தொடர்ந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வருகைதந்தவர்கள் பொலிஸாரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தியதை அடுத்து, பொலிஸார் பதில் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

 

Related Posts