
நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரம் அருகே வந்த இரு கொள்ளையர்கள் பெண் ஒருவரின் பெண் ஒருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியினை அபகரித்துச் சென்றுள்ளனர், இதன்போது கடமையில் இருந்த பொலிஸார் இவர்களை பின்தொடர்ந்து துரத்தி சென்றுள்ளனர்.
இதன்போது கட்டுநாயக்கா பகுதியில் வைத்து குறித்த கொள்ளையர்கள் பின்தொடர்ந்த பொலிஸாரை நோக்கி சுட்டதாகவும், பதிலுக்கு பொலிஸாரும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதன்போது கொள்ளையர்களில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதாகவும் மற்றயவர் பலத்த காயங்களுக்கு மத்தியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.