மக்கள் அவதாணமாக இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்!!!

நாடளாவிய ரீதியில் பெய்துவரும் கடும் கன மழை காரணமாக நீர்த்தேக்கம்கள், நீர் வீழ்ச்சிகள், ஆறுகள் மற்றும் ஏரிகளில் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளது. எனவே மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் அறிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் நீர் நிலைகளில் நீராடுவதனை தவிர்க்குமாறும் மற்றும் பண்டிகை நாட்களில் வெளியிடங்களுக்கு செல்லும்போது காட்ச்சிப்படுத்தப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் இவ்விடங்களில் மது அருந்துவதனை தவீர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts