
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக அவுஸ்ரேலியா செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தினை சேர்ந்த 45 பேர் ஹோட்டல் ஒன்றில் வைத்து பொலிஸாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் ஏழு பெண்களும், மூன்று குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.
அவுஸ்ரேலியாவுக்கு செல்வதற்கான நம்பிக்கையில் கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக பல்வேறு இடங்களில் தங்கியிருந்த நிலையில் இவர்கள் நேற்று வவுனியாவில் இருந்து உனவட்டுவானில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு வந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.