எதிராக போட்டியிட்ட நபர்களையும் அமைச்சர் ஆக்கும் ரிஷி சுண்ணக்: அனைவரையும் அரவணைத்து செல்கிறார் …

இன்றைய தினம் லிஸ் ரஸ் தனது பதவியை, ராஜினாமா செய்வதாக மன்னர் சார்ளசிடம் தெரிவித்துள்ள நிலையில். அதனை அவர் ஏற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து சுமார் 11 மணி அளவில், ரிஷி சுண்ணக்கை மன்னர் சார்ளஸ் சந்திக்கிறார். அதனை தொடர்ந்து பிரித்தானிய பிரதமராக ரிஷி சுண்ணக் ஏற்றுக் கொள்ளப் படுவார். மேலும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பென்னியை, அமைச்சராக அறிவிக்க உள்ளார் ரிஷி. அத்தோடு பென்னிக்கு ஆதரவு கொடுத்து வந்த தற்போதைய திறைசேரி அமைச்சர் ஜேர்மி ஹண்ட், தொடர்ந்து அமைச்சராக இருப்பார் என்று கூறப்படுகிறது. இதனூடாக ரிஷி சுண்ணக் யாரையும் பழிவாங்கவில்லை. மாறாக அனைவரையும் அரவணைத்துக் கொண்டு செல்கிறார் என்பது புரிகிறது. மேலும்…

பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சராக தற்போது இருக்கும், பென் வாலஸ் பொறிஸ் ஜோன்சனுக்கு ஆதரவு தெரிவித்து வந்ததோடு ரிஷியை கடுமையாக எதிர்த்தார். இவரது பதவி மட்டுமே ஊசலாடுகிறது. ரிஷி சுண்ணக் என்ன மாற்றங்களை கொண்டு வரப் போகிறார் என்று பொறுத்து இருந்து தான் பார்கவேண்டும்.

Related Posts