சில செக்கன் யோசித்தேன் தற்கொலை செய்ய வேண்டும் போல இருந்தது என்கிறார் அமுதவாணன்

பிக்பாஸ் ஆரம்பமான காலத்தில் இருந்து, அனைவராலும் பேசப்படும் ஒரு கேரைக்டர் வேறு யாரும் அல்ல, அமுதவாணன் தான். ஆனால் அவர் தொடர்பாக பலர் அறியாத சோகமான பக்கங்கள் பல உள்ளது. தனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயம் அமுதவாணனுக்கு இருந்து. இதன் காரணத்தால் தான், அவர் விஜய் TVல் நடந்த ஆடிஷனில் கலந்து கொண்டார். ஆனால் அவர் வந்தவேளை ஆடிஷன் முடிந்து விட்டதாம். இருப்பினும், இயக்குனருக்கு அமுதவாணனைப் பிடித்து விட்டது. இதனால் அவருக்கு வாய்ப்பை கொடுத்தார் இயக்குனர். ஆனால் பாவி போன இடம் எல்லாம் பள்ளமும் திட்டியும் என்பது போல, ஒரு விபத்தால் நிகழ்ச்சியில் தொடர முடியவில்லை.

அந்த சமயத்தில் இவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் குவிந்தன. தாரை தப்பட்டை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் சரியாக நேரத்தை ஒதுக்க முடியாத காரணத்தால் வாய்ப்புகளை இழந்தார். சரியாக ஜொலிக்க முடியாத காரணத்தால் தற்கொலை எண்ணம் அவரை தொடர்ச்சியாக துரத்தியது. எதை எடுத்தாலும் தோல்வி என்ற , நிலை தான் இவருக்கு இருந்து வந்தது. பல தடவை தற்கொலை செய்து விடலாம் என்ற முடிவை இவர் எட்டி இருந்தாராம்.

பல போராட்டங்களை தாண்டியே கே.பி.ஒய் சாம்பியன்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பழனியோடு இணைந்து அதில் வெற்றியினையும் பெற்றார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். சில செக்கன் தான் , நான் தற்கொலை செய்ய வேண்டுமா ? இதுதான் முடிவா ? என்று எண்ணிப் பார்த்தேன்… என் வாழ்கையே மாறி விட்டது என்று பேட்டி கொடுத்துள்ளார் அமுதவாணன். இன்றைய இளைஞர் சமுதாயத்திற்கு அமுதவாணன் ஒரு எடுத்துக் காட்டாக உள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts