லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் இல்பேஃட் நகரில் சற்று முன்னர் பெரும் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இதில் 3 இளைஞர்கள் மீது சுடப்பட்டுள்ள நிலையில். 2 இளைஞர்கள் இறந்து விட்டதாகவும், 3வது இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருவதாகவும் பொலிசார் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்துள்ளார்கள். இவர்கள் தமிழர்களா என்பது தெரியவில்லை. பல்லின மக்கள் வசிக்கும் இல்பேஃட் நகரில், இவர்கள் ஆபிரிக்க இனத்தவர்களாக இருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. குழு மோதலாக இது இருக்க கூடும் என்ற சந்தேகமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல் தெரிந்தால் தயவு செய்து எம்மை தொடர்பு கொள்ளவும்: athirvu@gmail.com