மட்டக்களப்பு பீதாம்பரத்தின் செத்த வீட்டில் வந்து அழுத குரங்கு: ஒவ்வொரு நாளும் உணவு கொடுத்து இருக்கிறார்..

இலங்கை மட்டக்களப்பில், பீதாம்பரம் ராஜன் என்ற 56 வயது நபர் இறந்து விட்டார். அவரது செத்த வீட்டிற்கு எல்லா உறவினர்களும் வந்தார்களோ இல்லை வரவில்லையோ தெரியவில்லை. ஆனால் ஒரு குரங்கு மட்டும் வந்து. அவரது உடலை பார்த்து அழுதது மட்டும் அல்லாது. அவரை முத்த மிட்டதோடு , அவரை தட்டி எழுப்பவும் முயற்ச்சி செய்துள்ளது. காரணம் நன்றிக் கடன் தான். பல வருடங்களாக பீதாம்பரம் ராஜன் குறித்த, அந்த குரங்கிற்கு பழங்களை கொடுத்து வந்துள்ளார். அது அவர் கொடுக்கும் உணவுகளை அடிக்கடி வாங்கி சாப்பிட்டு வந்த நிலையில். பீதாம்பரம் ராஜன் இறந்த பின்னர், அந்த துயரத்தை குரங்கால் தாங்க முடியவில்லை.

செய்த உதவிகளை மனிதர்களே மறந்து விட்டு செல்லும் இந்த கலி யுகத்தில், செய்த நன்றிக்காக செத்தவீட்டுக்கு சென்ற குரங்கு எவ்வளவோ மேல். அதிர்வு இணைய வாசகர்களுக்காக இங்கே வீடியோ இணைத்துள்ளோம்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts