யாழ்…பல்கலைக்கழக மாணவர்களுக்கு தண்டனை!!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு புதிதாக கற்றல் செயற்பாடுகளுக்கு வருகைதந்த மாணவர்களிடத்தில் பகிடிவதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஸ்ர மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய இடம்பெற்ற விசாரணைகளுக்கு அமைவாக குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, கலைபீடத்தினைச் சேர்ந்த 14 மாணவர்களுக்கு ஆறு மாதகால வகுப்புத் தடையும், தொழிநுட்பத் பீடத்தினைச் சேர்ந்த நாண்கு பேருக்கு இரண்டு வருடகால வகுப்புத் தடையும் மற்றும் விஞ்ஞான பீடத்தினைச் சேர்ந்த ஒருவருக்கு இரண்டு வருடகால வகுப்புத்தடையும் தண்டனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் பகிடிவதைக்கு எதிரான தண்டனைக் கோவையின்படி குற்றங்களின் தன்மைக்கேற்ப இவ் தண்டனையானது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக உரிய மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழக வளாகத்தினுல் உட்செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருப்பார்களாயின் குறித்த விடுதியினை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts