யாழ் மறைமாவட்ட அடிகளாரின் கோரிக்கை!!!

எமது சமுதாயத்தினையும் எதிர்கால சந்ததியினரையும் பாதகமான நிலமைக்கு கொன்டுசெல்லும் போதைப்பொருள் பாவணைக்கு எதிராக அணைவரும் பாடுபட வேண்டும் என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எமது மாகாணத்தில் போதைப்பொருள் பாவணைக்கும் போதைப்பொருளினை கடத்துவதற்கும் பலர் உடந்தையாக காணப்படுகின்றனர், எனவே இவ்வாறானவர்கள் இத்தகைய தீய செயற்பாட்டில் இருந்து விலக வேண்டும் என நாங்கள் மன்றாட்டமாக கோருகின்றோம்,

இவ்வாறான தீய செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பாதுகாப்புத் தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் இவ்வாறான பழக்கத்திற்கு அடிமையாகிய பிள்ளைகளை பெற்றோர்கள் உடனடியாக புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி சிகிச்சையளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts