வவுனியா… தீர்வு கிடைக்கும்வரை எமக்கு தீபாவளி இல்லை!!!

காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு நீதி கோரி வவுனியா பிதான தபால் நிலையத்திற்கு முன்பு தீபாவளி தினத்தன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் தமது உறவுகளுக்காக கவனயீர்ப்பு ஆற்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 13 வருடங்களாக எமது தமிழ் தேசியத்தினை கொன்று குவித்த பேய்கள். இவர்கள் அரசியலில் இருந்து எமக்கு ஒருபோதும் தீர்வினை பெற்றுத்தரப் போவதில்லை, எங்களை முட்டால்கள் என நினைத்து ஒவ்வொரு தரமும் அடுத்த தீபாவளிக்கு தீர்வினைப் பெற்றுத் தருவதாக நாடகம் நடத்துகின்றனர்.

எனவே எமது கோரிக்கைக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசியலில் இருந்து வெளியேறினால் நாங்கள் எதிர்காலத்தில் தீபாவளியினை மிக சந்தோசமாக கொன்டாடுவோம் என தெரிவித்துள்ளனர்.

Related Posts