பிரித்தானியாவில் 18ம் நூற்றாண்டுக்குப் பின்னர், நவீன யுகத்தில் மிக இளைய வயதில் பிரதமர் ஆகி இருப்பது ரிஷி சுண்ணக் தான். இவருக்கு வயது 42. இந்து மதத்தை சேர்ந்த ரிஷி சுண்ணகிற்கு கிருஷ்ணா என்னும் குழந்தையும் அனுஷ்கா என்ற பெண் குழந்தையும் உள்ளார்கள். இவர் திருமணம் முடித்தது, இன்போஃசிஸ் நாராயணசாமியின் மகள், அக்ஷாட். மனைவியின் செத்து மதிப்பு, பிரித்தானிய அரச குடும்பத்தை காட்டிலும், உயர்ந்தது. இந்தியாவில் அக்ஷாட்டின் தந்தை நாராயணசாமி , முகேஷ் அம்பானி அளவு செல்வந்தர் ஆவார். ஆனால்…
ரிஷி சுண்ணக் பிரித்தானியாவில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது அப்பா ஒரு மருந்து கடை ஒன்றை வைத்திருந்தார். அதில் அவர் வேலை பார்த்துக் கொண்டு படிப்பை முடித்தார். வணிகவியல் சம்பந்தமாக கரைத்துக் குடித்த நபர் ரிஷி சுண்ணக். காலத்தின் தேவை கருதி, ஆழும் டோரிக் கட்சி இவரை ஏக மனதாக தெரிவுசெய்து உள்ளார்கள். தற்போது அந்தக் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக ரிஷி சுண்ணக் உள்ளார் என்றால் அது மிகையாகாது. இன்று 25ம் திகதி ரிஷி சுண்ணக், மன்னர் சார்ளசைப் பார்த்து , தான் அரசாங்கத்தை அமைக்க உள்ளதைக் கூறி, அனுமதி பெறவேண்டும். பின்னர் இலக்கம் 10 டவுனிங் வீதிக்கு முன்னால் வைத்து, தேசத்திற்கு உரையாற்ற உள்ளார். நேற்றைய தினம் தீபாவளி நாளில், அவர் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.