இந்த 2 இளைஞர்களே யாழ் கிணற்றில் இருந்து மீட்க்கப்பட்டார்கள்- பெரும் அச்சம் நிலவுகிறது

பருத்தித்துறை புலோலி சிங்கநகர் பகுதியில் நேற்று முன் தினம், இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த சுசேந்தகுமார் சசிகாந் (வயது:24), மந்திகை உபயகதிர்காமம் பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் லம்போசிகன் (வயது :24) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்துக்களின் பண்டிகையான தீபாவளி அன்று, இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

புலன் விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்பே சம்பவம் தொடர்பில் உறுதியான தகவலை வழங்க முடியும் என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts