இலங்கை நடிகை லாஸ்லியா நடித்துள்ள அன்ன பூரணி அசத்தலான் பர்ஸ்ட் லுக் இது தான் !

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் லாஸ்லியா மற்றும் லிஜோமால் ஜோஸ். அறிமுக இயக்குனர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில் இவர்கள் இருவரும் நடிக்கும் திரைப்படம் ”அன்னபூரணி”. குடும்ப அமைப்பிற்குள் வாழும் ‘பூரணி’ மற்றும் குடும்ப அமைப்பிற்கு வெளியே வாழும் ‘அனா’ இவர்களின் பயணமே இந்த திரைப்படம் ஆகும். குடும்ப அமைப்பிற்குள் பெண்கள் அனுபவிக்கும் சிரமங்களை ரசிகர்களுக்கு பிடிக்கும் வண்ணம் ஒரு மாறுபட்ட படமாக கூறியுள்ளது இந்த திரைப்படம். பாடலாசிரியர் யுகபாரதி இந்த படத்திற்கு பாடல்கள் மற்றும் வசனங்களை எழுதியுள்ளார். ஹெக்டர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts