
நாட்டில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் மிக முக்கியமாக மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக எததிர்காலங்களில் வைத்திய சேவைகளை இடைநிறுத்த வேண்டிய தேவை ஏற்படலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மயக்க மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுபாடு காரணமாக சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அதிகளவிலான மருந்துப் பொருட்களை தனியார் மருந்தகங்களில் இருந்து கொள்வனவு செய்வதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.