ரிஷி சுண்ணக்கின் பெயர் கூட சரியாக தெரியாமல் மாறாட்டத்தில் இருக்கும் பைடன்.. வீடியோ இணைப்பு !

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வயது முதிர்வு காரணமாக மாறாட்டத்தில் உள்ளார். இதனை பல தடவை பலர் நேரில் பார்த்துள்ளார்கள். ஆனால் அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்தும் ஜோ பைடன் நல்ல நிலையில் உள்ளதாக தெரிவித்து வருகிறார்கள். நேற்றைய தினம், இடம்பெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய ஜோ பைடன், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுண்ணக்கின் பெயரை சில தடவை தவறாக சொல்லி உள்ளார். அவரால் ரிஷி என்ற பெயரை கூட சரியாக நினைவில் வைத்திருக்க முடியவில்லை. ராஷீர்…ராஷீர் என்று கூறியுள்ளார் பைடன். இன் நிலையில் அவரால் தனது கடமையை எப்படி சரி வரச் செய்ய முடியும் என்ற கேள்விகள் எழுந்துள்ளது. கீழே வீடியோ இணைப்பு.