
இலங்கையில் இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் புணர்வாழ்வுக்காக ஒப்படைக்கப்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்தானது உண்மைக்கு புறம்பாகும் அத்துடன் அவ்வாறு இடம்பெற்றதற்கான சான்றுகள் எதுவும் இல்லை என காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, அவ்வாறு காணாமல் போனவர்களில் 50 சதவீதமாநோர் வெளிநாடுகளில் வசிப்பதாகவும் மிகுதிப்பேர் விடுதலைப் புலிகளினால் கடத்தப்பட்டுள்ளதாகவும் அல்லது அவர்களுக்கு எதீரான குழுக்களினால் கடத்தப்பட்டு இருக்கலாம் என தெரிவித்ததோடு, இறுதி யுத்த காலப்பகுதியில் பொதுமக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுவதனை தாம் மறுப்பதாகவும் மற்றும் அந்த நேரத்தில் இராணுவத்தினர் அதிகளவிலான மக்களின் உயிர்களை காப்பாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.