
நாட்டில் 18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர் மற்றும் யுவதினளிடையே எச்ஜவி தொற்றானது மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தேசிய பாலுறவு நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் ரசாஞச்லி ஹெட்டியாராச்சி தெரவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் இதுவரை 4,404 எச்ஜவி தொற்றாளர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 1000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2300 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் 1500 எச்ஜவி தொற்றாளர்கள் தாம் எச்ஜவி தொற்றாளர் என தெரியாமலே சமூகத்தில் வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாக இவ் நோய்த் தொற்று உருவாகுவதாகவும், பெற்றொர்கள் பிள்ளைகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடுவதன் மூலம் இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார.