என் மருமகன் பிரித்தானியாவை சரியாக ஆட்சி செய்வான் – இன்போஃசிஸ் நாராயணன் தெரிவித்தார்

76 வயதாகும் இன்போஃசிஸ் நாராயணன் என்றால் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியாவில் பூனேயில் 1981ம் ஆண்டு இந்த கம்பெனியை அவர் ஆரம்பித்தார். இன்று 2 லட்சத்தி 76,000 பேர் இன்போஃசிஸ் கம்பெனியில் வேலை பார்கிறார்கள். வருடம் தோறும் ஆயிரம் ரில்லியன்(T) இந்திய ரூபாவை அது ஈட்டுகிறது. அதன் சொத்து மதிப்பு 3.4B $ டாலர்கள் ஆகும். அது வெறும் அரசாங்கத்திற்கு காட்டும் கணக்கு. அதற்கு மேல் இந்த கம்பெனி சொத்துக்கள் உள்ளது. அதில் 3% விகிதத்தை மட்டுமே தனது மகளுக்கு கொடுத்துள்ளார் நாராயணன். அதன் மதிப்பு 750மில்லியன் பவுண்டுகள் ஆகும் என்கிறார்கள். இந்த சொத்தை தான் வைத்திருக்கிறார், ரிஷி சுண்ணக்கின் மனைவி.

இன்போஃசிஸ் நாராயணன் பொதுவாக எந்த ஒரு அறிவித்தலையும் தனிப்பட்ட ரீதியில் விடுவது இல்லை. ஆனால் நேற்றைய தினம்(26) அவர் தனது மருமகனை வாழ்த்தி செய்தி வெளியிட்டுள்ள விடையம். இந்தியாவை மட்டும் அல்ல உலகையே ஒரு செக்கன் உலுப்பி உள்ளது. இந்தியாவின் பில் கேட்ஸ் என்று அழைக்கப்படும், நாராயணன் தனது மருமகன், பிரித்தானியாவை நன்றாக ஆட்சி செய்து. அன் நாட்டை உயர்த்துவார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Posts