
நிக்கி கல்ராணி வெளியிட்ட லேட்டஸ்ட் ரொமான்டிக் புகைப்படம் இதோ!
தமிழில் மிருகம் படத்தில் அறிமுகமாகி மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஆதி. இவர் நடிகை நிக்கி கலைராணியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். நிக்கி கல்ராணி ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாக டார்லிங் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர்.
தொடர்ந்து ஆதியுடன் மரகத நாணயம், யாகாவராயினும் நாகாக்க, விஷ்னு விஷாலுடன் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், விக்ரம் பிரபுவுடன் நெருப்புடா, பிரபுதேவாவுடன் சார்லி சாப்ளின் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர்கள் இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். இந்நிலையில் தற்போது ஜோடியாக ரொமான்டிக் தீபாவளி கொண்டாடிய லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார்.


