பாதிரிகளும் தாதிகளும் காமத்தை தூண்டும் வீடியோவை பார்கிறார்கள்- பெரும் கவலையில் போப் ஆண்டவர்

வத்திக்கானில் உள்ள போப் ஆண்டவரின், மாளிகை மற்றும் அருகில் உள்ள தேவாலயங்களில் பணி புரியும் பாதிரிமார் மற்றும் கன்னியாஸ்திரிகள், அடிக்கடி செக்ஸ் வீடியோக்களை இன்ரர் நெட்டில் பார்பதாக போப் ஆண்டவர் கூறி கவலையடைந்துள்ளார். கன்னியாஸ்திரிகள் மற்றும் பாதிரி மார்கள், முற்றும் துறந்தவர்களாக ஒழுக்க சீலர்களாக இருக்கவேண்டும். ஆனால் அவர்களே, தமது மோபைல் போனில், ஆபாச வீடியோக்களை பார்ப்பது, தனக்கு பெரும் கவலையளிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நான் அனைவரையும் குறை கூறவில்லை என்று தெரிவித்துள்ள போப் ஆண்டவர். சிலரே இவ்வாறு செய்து வருவதாகவும். இவர்கள் செய்யும் தவறுகள் தொடர்பாக தாமக்கு அறிக்கைகள் வந்துள்ளதாகவும் மேலும் கூறியுள்ளார்.

Related Posts