
முன்னால் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கு காரணமாக இருந்தவர் என குற்றம் சுமத்தி தனிப்பட்ட முறையில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய அவர் எதிர்வரும் நவம்பர் 24 வரை வெளிநாடு செல்ல பயணத்தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் இன்று கட்டளை பிறப்பித்தார்.
ஏற்கனவே இவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கட்டளைக்கு இவர் நீதி மன்றத்தில் ஆஜர் ஆகாத நிலையில், இன்றைய தினம் நீதி மன்றில் ஆஜராகி இருந்தார் இதற்கமைய அவருக்கு மேற்குறித்த கட்டளையும், 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்