தீபாவளி தினத்தன்று பிரித்தானிய பிரதமராக பொறுப்பேற்று உள்ளார் ரிஷி சுண்ணக். அவர் ஒரு இந்தியர் மட்டும் அல்ல, ஹிந்து மதத்தை சார்ந்தவர். அவர் மன்னர் சார்ளசை சந்திக்கச் சென்றவேளை. மன்னர் ரிஷியை, வித்தியாசமான ஒரு அறையில் வைத்து சந்தித்துள்ளார். வழமையாக பிரதமர்களை மகாராணி சந்திக்கும் அறை அல்ல. பிரத்தியேக இடத்தில் ரிஷியை சந்தித்த மன்னர், அங்கே தீபாவளி உணவுகளை, அதிலும் குறிப்பாக இனிப்பு பண்டங்களை வைத்திருந்துள்ளார். இவை மாளிகையில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட இந்திய இனிப்பு பண்டங்களாம். அதனை..
உண்ட பின்னரே ரிஷி மன்னர் சார்ளஸ் மாளிகையில் இருந்து புறப்பட்டு, இலக்கம் 10 டவுனிங் வீதிக்கு சென்றுள்ளார். இதனூடாக மான்னர் சார்ளஸ் ரிஷிக்கு சிறந்த மரியாதை கொடுத்து அனுப்பியுள்ளார். அது போக பகவத் கீதை மேல் சத்தியம் செய்தே ரிஷி சுண்ணக், பதவிப் பிரமாணம் எடுத்துள்ளார் என்றும், அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.