
நடிகை சினேகா வெளியிட்ட லேட்டஸ்ட் பியுட்டிபுல் போட்டோஸ்!
தமிழ் சினிமாவின் எவர் க்ரீன் நடிகையான சினேகா கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகிவிட்டார்.
கோலிவுட் ரசிகர்களுக்கு சூர்யா – ஜோதிகா, அஜித் – ஷாலினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்படும் காதல் தம்பதி என்றால் அது சினேகா – பிரசன்னா ஜோடி தான். இவர் குழந்தை பெற்ற பின்னரும் கூட ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தைப் பிடித்துள்ளார்.
குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட சினேகா, தற்போது கடுமையான உடற்பயிற்சி மூலம் உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறி உள்ளார். தொடர்ந்து தனது அழகான போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது தனது அழகிய பிங்க் சல்வாரில் சொக்கி இழுக்கும் தேவதை போன்று போஸ் கொடுத்து 90ஸ் கிட்ஸ்களை மயக்கியுள்ளார்.




