திருடச்சென்ற வீட்டில் பாட்டி போட்ட திருடர்கள்!!!

யாழ்ப்பாணம் மூளாய் பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பம் நேற்று முந்தினம் தமது உறவிணர் வீட்டுக்கு சென்றுள்ளநிலையில் அந்த சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்திருந்த திருடர்கள் இருவர் திருடுவதற்காக வீட்டிற்குள் நுளைந்துள்ளனர். அப்பொழுது வீட்டினுல் இருந்த மது போத்தலினை கண்டதும் இருவரும் மெய்மறந்து நல்லா மது அருந்தியதுடன் குறித்த வீட்டில் சமைத்து சாப்பிட்டு விட்டு அதிக மது போதை காரணமாக அங்கயே படுத்துறங்கியுள்ளனர்.

குறித்த வீட்டார் காலையில் வீடு திரும்பியதும் வீட்டினுல் இருவர் மது அருந்திவிட்டு தூக்கத்தில் இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியினை நாடினர், இந்த சமயம் சத்தம் காரணமாக திடிரேன்று எழும்பிய திருடர்கள் அங்கிருந்து தப்பியோடும்போது ஒருவர் அயலவர்களால் துரத்திப் பிடிப்க்கப்பட்டார் மற்றயவர் தப்பிச்சென்றுள்ளார். இந்நிலையில் பிடிபட்டவரை வட்டுக்கோட்டை பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணையினை முன்னேடுத்துள்ளனர்.

Related Posts