நாட்டில் அதிகரித்துள்ள வாகனக் கொள்ளை!!!

கொள்ளை

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் வாகனக் கொள்ளை தொடர்பாக அதிகரித்த முறைப்பாடு அதாவது கார், மோட்டார் சைக்கிள், முற்ச்சக்கர வண்டி, லொறி மற்றும் பேருந்து தொடர்பான வாகனக்கொள்ளை சம்மந்தமாக 1406 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குறித்த முறைப்பாடுகளிற்கு அமைவாக அதிகளவில் முற்ச்சக்கர வண்டி கொள்ளைச் சம்பவம் பதிவாகியுள்ளதாகவும் பொதுமக்கள் இது தொடர்பில் மிக அவதானத்துடன் இருக்குமாறும், இந்த முறைப்பாடுகள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னேடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Posts